/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
/
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 09, 2025 07:00 AM
கடலுார்: கடலுாரில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி கூறியதாவது; சேமிப்பு கிடங்கில் தற்போது 4,759 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 3,569 கட்டுப்பாட்டு கருவிகளும், 3889 ஓட்டுப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்கள் என மொத்தம் 12,217 இயந்திரங்கள் உள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணி டிச., 11ம் தேதி முதல் நடக்க உள்ளது. முதல் நிலை ஓட்டுப்பதிவு இயந்திர சரிபார்ப்பு பணி நடக்கும் அனைத்து இடங்களும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தலைமைத் தேர்தல் அலுவலரால் கண்காணிக்கப்படுகிறது. கட்சி பிரநிதிகள் மாதிரி வாக்குப்பதிவு செய்யலாம். எனவே, கட்சி பிரதிநிதிகள் தினமும் காலை 9:00 மணிக்கு சேமிப்பு கிடங்கிற்கு வந்து பணி முடியும் வரை உடனிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோடி, நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருநாவுக்கரசு, தேர்தல் வட்டாட்சியர் சுரேஷ்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

