ADDED : மார் 17, 2024 12:01 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த விசூர் காட்டாறு பகுதியில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ,. துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த விசூர் காட்டாறு பகுதியில் கனிமவளத்துறை நிதி மூலம், 9 கோடி ரூபாய் செலவில் 90 மீட்டர் அகலத்தில் 1.2 மீட்டர் உயரத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. நேற்று நடந்த அதற்கான பூமி பூஜையில் நெய்வேலி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பங்கேற்று துவக்கி வைத்தார்.
ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
விருத்தாசலம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் ரஜினிகாந்த், உதவி பொறியாளர் வினோத்கண்ணன் வரவேற்றனர்.
மின்வாரிய பொறியாளர் ராமலிங்கம், துணை தாசில்தார் தேவநாதன், வி.ஏ.ஒ., பாலகிருஷ்ணன், மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிட நல துணை அமைப்பாளர் சிவமுருகன், ஊராட்சி தலைவர் சாந்திபாலகிருஷ்ணன், லட்சுமிகாந்தன், அண்ணாமலை, பழனிவேல், ஒன்றிய இளை ஞரணி அரிகிருஷ்ணன், லட்சுமணன், வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

