/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி கடலுாரில் டி.ஜி.பி., ஆய்வு
/
போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி கடலுாரில் டி.ஜி.பி., ஆய்வு
போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி கடலுாரில் டி.ஜி.பி., ஆய்வு
போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி கடலுாரில் டி.ஜி.பி., ஆய்வு
ADDED : மார் 14, 2024 11:54 PM

கடலுார்: கடலுாரில் போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணியை, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக டி.ஜி.பி விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில், கடலுார் புதுக்குப்பம் ஆயுதப்படை மைதானம் எதிரில், 24 சப் இன்ஸ்பெக் டர்கள் குடியிருப்புகள், 155 போலீசார் குடியிருப்புகள் ரூ.54.16 கோடி செலவில் கட்டப்படுகிறது. கடந்த 5ம் தேதி கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
ஐந்து அடுக்கு மாடி அப்பார்ட்மெண்ட் வடிவில், 20 வீடுகள் கொண்ட ஒன்பது பிளாக்குகளாக கட்டப்படுகிறது. இவைகளில் கார் பார்க்கிங், லிப்ட் வசதி, தீயணைப்பு போன்ற அனைத்து வசதிகள் செய்யப்படுகிறது.
கட்டுமான பணியை, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக டி.ஜி.பி., விஸ்வநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டுமான பிரிவு பொறியாளர்கள் ஜெயக்குமார், சீனிவாசன், ரகு ஆகியோரிடம் கட்டுமானம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது எஸ்.பி., ராஜாராம், டி.எஸ்.பி., பிரபு, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக பொறியாளர்கள் சங்கர், சாந்தி, பார்த்தீபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

