/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி ஞானகுரு மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி-வினா போட்டி

ADDED : டிச 09, 2025 07:08 AM

திட்டக்குடி: திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திட்டக்குடி, ஞானகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் சார்பில் பதில் சொல், பரிசு வெல் வினாடி - வினா போட்டி நடந்தது. முதற்கட்ட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவிகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, தகுதிச்சுற்று நடந்தது. போட்டியின் இறுதியில் 8ம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ, 9ம் வகுப்பு மாணவி பவதாரணி முதலிடமும், 9ம் வகுப்பு மாணவர்கள் வினோராஜ், அஜித் இரண்டாமிடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி நிறுவனர் கோடி, தாளாளர் சிவகிருபா, பள்ளி முதல்வர் அய்யாதுரை ஆகியோர் பாராட்டி, சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கினர். பள்ளி நிர்வாக அலுவலர் சித்ரா வரவேற்றார். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி அளவில் வெற்றிபெற்ற இரு அணிகளும் மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.