/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
/
கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 02, 2025 04:50 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆளவந்தார், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மத்திய அரசு பொது பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும், ஊனமுற்றோர் உரிமைகளுக்கான பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், ஆந்திராவை போல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6000 மாத உதவித்தொகை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்களின் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.