மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி: முத்தையர் பள்ளி மாணவிகள் 2ம் இடம்
மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி: முத்தையர் பள்ளி மாணவிகள் 2ம் இடம்
UPDATED : நவ 04, 2026 03:53 PM
ADDED : நவ 04, 2026 03:42 PM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2ம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
பண்ருட்டி அடுத்த மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நேற்று (நவ.,3) நடந்தது. இப்போட்டியில், மாவட்டத்தில் உள்ள 11 மண்டல அளவிலான குழுக்கள் கலந்து கொண்டன.
போட்டியில் பண்ருட்டி செயின்ட் ஆன்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள முத்தையர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2ம் இடம் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்பயிற்சி ஆசிரியர்கள் பெல்லா, மீனாட்சி ஆகியோரை பள்ளி தாளாளர் ஜெர்சி பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
