/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு தேடி ரேஷன் பொருட்கள் 3 மற்றும் 4ம் தேதி வினியோகம்
/
வீடு தேடி ரேஷன் பொருட்கள் 3 மற்றும் 4ம் தேதி வினியோகம்
வீடு தேடி ரேஷன் பொருட்கள் 3 மற்றும் 4ம் தேதி வினியோகம்
வீடு தேடி ரேஷன் பொருட்கள் 3 மற்றும் 4ம் தேதி வினியோகம்
ADDED : டிச 02, 2025 04:56 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன்கார்டுதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ், நாளை 3ம் தேதியும், நாளை மறுநாள் 4ம் தேதி வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி ரேஷன் கார்டு தாரர்களின் நலன்கருதி, அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடலுார் மாவட்டத்தில் நாளை 3 மற்றும் நாளை மறுநாள் 4 ஆகிய தேதிகளில் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.