ADDED : டிச 08, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: 8: -: பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நல்லுார் வட்டார கல்வி அலுவலர் ரமேஷ் ஆண்டாய்வு மே ற்கொண்டார்.
அப்போது, மாணவர் சேர்க்கை விண்ணப்பம், ஆசிரியர் வருகை பதிவேடு, மாணவர்களின் வருகை பதிவேடு, இயக்கப் பதிவேடு, வகுப்பாசிரியர் மதிப்பீட்டு பதிவேடுகள் பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், உதவி ஆசிரியர் செல்வன், ஆசிரியர்கள் லட்சுமி, பவுசியா பேகம், துர்காதேவி இளவரசி, ஆனந்தராஜ் உடனிருந் த னர்.

