தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு பள்ளிகளில் பல ஆண்டுகளாக நீடிக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் கண்டு கொள்ளாத கல்வித்துறை அதிகாரிகள்

 அரசு பள்ளிகளில் பல ஆண்டுகளாக நீடிக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் கண்டு கொள்ளாத கல்வித்துறை அதிகாரிகள்

 அரசு பள்ளிகளில் பல ஆண்டுகளாக நீடிக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் கண்டு கொள்ளாத கல்வித்துறை அதிகாரிகள்


ADDED : ஜூலை 09, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்பட்டு வருகிறது.

இந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் தலைவர், துணைத் தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மேலாண்மைக்குழு என்ற குழுவினர்களும் தேர்வு செய்யப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு குழுக்களிலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற் றோரே, பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்பது அரசின் உத்திரவு.

ஆனால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் பல ஆண்டுகளாக ஒரு சிலரே தொடர்ச்சியாக பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். ஒரு தடவை தேர்வு செய்யப்பட்டவர்கள், 3 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க வேண்டும்.

அதற்கு பிறகு, பள்ளியில் படிக்கும் மாணவர் களின் பெற்றோரில், யாரையாவது பொறுப்பு களில் தேர்வு செய்யவேண்டும். ஆனால் பல பள்ளிகளில் அரசியல் தலையீடு மற்றும் பணம் படைத்தவர்கள் என ஒரு சிலரே தொடர்ச்சியாக இந்த பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.

இதனால் பள்ளியில் மாணவர் தேவை என்ன என்பது பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு தெரியாத நிலை உள்ளது.

இதை கல்வித்துறை அதிகாரிகளும் கண்டும் காணாமல் உள்ளனர். ஆகையால் பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியிலும் 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களை மாற்றி புதியதாக தேர்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us