/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொடி நாள் வசூல் : ஆர்.டி.ஓ., துவக்கி வைப்பு
/
கொடி நாள் வசூல் : ஆர்.டி.ஓ., துவக்கி வைப்பு
ADDED : டிச 09, 2025 07:07 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த கொடிநாள் வசூலை, ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா துவக்கி வைத்தார்.
முப்படை வீரர்களின் பணி மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் தேதி படைவீரர் கொடி நாளாக அரசு கடைப்பிடித்து வருகிறது. கொடி விற்பனையின் மூலம் கிடைக்கும் நன்கொடைகள் தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்பத்தினரின் நல்வாழ்வு மற்றும் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்கு பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி, விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த முன்னாள் படை வீரர்களுக்கான கொடி நாள் வசூல் பணியை ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா துவக்கி வைத்தார்.
தாசில்தார் அரவிந்தன், ஊர்க்காவல் படை தளபதி கண்ணன், படைப்பிரிவு தளபதி காணிக்கைராஜ், ஆறுமுகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

