/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொடி கம்பங்கள் குமராட்சியில் அகற்றம்
/
கொடி கம்பங்கள் குமராட்சியில் அகற்றம்
ADDED : மே 27, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி கடைவீதியில் உள்ள கொடி கம்பங்களை போலீசார் அதிரடியாக அகற்றினர்.
தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. கொடிக்கம்பங்களை தாங்களாகவே அகற்றிக் கொள்ள நெடுஞ்சாலைத் துறையினர் நோட்டிஸ் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, குமராட்சி கடைவீதியில் வைக்கப்படிருந்த கட்சிக் கொடி கம்பங்களை இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றினர்.

