/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளம் பெருக்கெடுப்பு :போக்குவரத்து துண்டிப்பு
/
வெள்ளம் பெருக்கெடுப்பு :போக்குவரத்து துண்டிப்பு
ADDED : டிச 08, 2025 05:56 AM

விருத்தாசலம்: வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வலசை - இளங்கியனுார்; எம்.புதுார் - பிஞ்சனுார் கிராம இணைப்பு சாலைகளின் குறுக்கே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, பல்வேறு கிராமங்களில், விளைநிலங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும், பெரும்பாலான கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விருத்தாசலம் அடுத்த வலசை - இளங்கியனுார் செல்லும் சாலையின் குறுக்கே, கடந்த மூன்று நாட்களாக மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு ள்ளது.
இதன் காரணாக, நெடுஞ்சாலை துறை சார்பில், இந்த சாலையில் குறுக்கே, வாகனங்கள் செல் லாதவாறு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எம்.புதுார் - பிஞ்சனுார் கிராம சாலையில் குறுக்கே மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் மாற்று பாதையில் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.

