/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தல் அறிவிப்பையொட்டி குறைதீர் கூட்டம் ரத்து
/
தேர்தல் அறிவிப்பையொட்டி குறைதீர் கூட்டம் ரத்து
ADDED : மார் 18, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : லோக்சபா தேர்தல் அறிவிப்பையொட்டி, வாரந்தோறும் திங்கள் கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு;
தமிழகத்தில் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது என, அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடக்கும் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் தேர்தல் நடை முறை விதிகளின்படி இன்று (18ம் தேதி) முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.

