ADDED : மார் 18, 2024 03:50 AM

கடலுார், : கடலுாரில் லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் கண்காணிப்புக் நிலைக் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
லோக்சா தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டதும் நாடு முழுதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
இதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் ஒரு சட்டசபை தொகுதிக்கு பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு நிலைக் குழு என தலா 3 குழு வீதம் 54 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
மாவட்ட எல்லைகள், முக்கிய சந்திப்பு இடங்களில் என, 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுப்பட உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் சிறப்பு படையினர் மாவட்டம் முழுதும் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடலுாரில் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகில் நிலையான கண்காணிப்பு அலுவலர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

