/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சப் இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்றவருக்கு மாவுக்கட்டு
/
சப் இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்றவருக்கு மாவுக்கட்டு
சப் இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்றவருக்கு மாவுக்கட்டு
சப் இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்றவருக்கு மாவுக்கட்டு
ADDED : டிச 09, 2025 07:09 AM

நெய்வேலி: நெய்வேலியில் சப்இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்றவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது கால்தவறி கீழே விழுந்ததில் கை எலும்பு முறிந்தது.
நெய்வேலி டவுன்ஷிப் சப் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, நெய்வேலி பி 2 மாற்று குடியிருப்பு சுடுகாடு அருகே கையில் வீச்சருவாளுடன் இருந்த நபர், போலீசார் வருவதை கண்டு தப்பி ஓட முயன்றார்.
போலீசார் அவரை துரத்தி பிடிக்க முற்பட்டபோது சப்இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரனை, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடினார். துரத்தி பிடிக்க முற்பட்டபோது கால் இடறி கீழே விழுந்ததில் வலது கை மணிக்கட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.
அந்த நபரை பிடித்து விசாரித்த போது, இந்திரா நகர், பி 2 மாற்று குடியிருப்பு, 9 வது மெயின்ரோட்டைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராகேஷ், 28; என தெரியவந்தது. உடனடியாக ராகேஷை கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து மாவுகட்டு போடப்பட்டது.
பிடிப்பட்ட ராகேஷ் மீது கஞ்சா, கொலை முயற்சி வழக்கு என 3 வழக்குகள் உள்ளன. போலீசார் ராகேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

