ADDED : ஜூலை 06, 2026 03:48 AM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலத்காரம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட 29 வயது பெண். நேற்று முன்தினம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் சந்தை அருகே நடந்து சென்றார். அப்போது மர்ம ஆசாமி அப்பெண்ணை சந்தை பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் பலாத்கார வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
