/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் தேசிய நிதித்துறை கருத்தரங்கம்
/
என்.எல்.சி.,யில் தேசிய நிதித்துறை கருத்தரங்கம்
ADDED : டிச 09, 2025 07:09 AM

நெய்வேலி: என்.எல்.சி., நிதித்துறை சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு நிறைவு பெற்றது.
கடலுார் மாவட்டம் என்.எல்.சி.,யில் நிதி 360 திறன் இணக்கம் மற்றும் புதுமை என்ற தலைப்பில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமையில் நடந்தது.
நிலையான ஆற்றல், நிறுவன நிர்வாகத்தை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவின் பங்கு, கார்பன் வெளியேற்றம் குறித்த கணக்கீடு, நவீன கருவூல உத்திகள் மற்றும் பொது நிதி மேலாண்மை போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.
நிதி, நிர்வாகம் மற்றும் வளர்ந்து வரும் நிதி உத்திகள் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
என்.எல்.சி., இயக்குனர்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீர் ஸ்வரூப், வெங்கடாசலம், பிரசன்ன குமார் ஆச்சார்யா, ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா, என்.எல்.சி., விஜிலென்ஸ் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் கலந்து கொண்டு, எரிசக்தித் துறையில் உள்ள நவீன நிதி கருத்துகள் குறித்து பேசினர்.

