ADDED : மார் 14, 2024 11:57 PM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சி கரிக்குப்பம் கிராமத்தில், சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஊராட்சி துணைத் தலைவர் விஜயராஜா முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ரங்கசாமி வரவேற்றார்.
சமுதாய நலக்கூடத்தை, பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் அசோகன், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், பா.ம.க., மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ், பொதுக்குழு உறுப்பினர் சிங்காரவேலு, மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, மாவட்ட துணை செயலாளர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், முன் னாள் துணை சேர்மன் முடிவண்ணன் உட்பட பலர், பங்கேற்றனர்.
கிளை செயலாளர் உலக நாதன், நன்றி கூறினார்.

