தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பண்ருட்டி அரசு கல்லுாரி முதலாம் ஆண்டு துவக்க விழா

 பண்ருட்டி அரசு கல்லுாரி முதலாம் ஆண்டு துவக்க விழா

 பண்ருட்டி அரசு கல்லுாரி முதலாம் ஆண்டு துவக்க விழா


ADDED : ஜூலை 04, 2026 08:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 08:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் துவக்க விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் ஞானவேல் வரவேற்றார். இதில் கடலுார் மாவட்ட இணையவழி குற்ற தடுப்பு ஏ.டி.எஸ்.பி.,ரகுபதி, இணையவழி குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாவட்ட இணைய வழி குற்றத்தடுப்பு இன்ஸ்பெக்டர் அமலா, சப் இன்ஸ்பெக்டர் சூர்யா ஆகியோர் விழிப்புணர்வுடன் இருப்பது குறித்து பேசினர்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர் உத்திராம்பாள், மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்பாடுகள் இருந்தால் தைரியமாக உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். இதில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி புலமுதல்வர் முத்துகுமரப்பன், ஆங்கில துறைத் தலைவர் முகுந்தன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us