/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் பூஜை பொருட்கள் விலை 'கிடுகிடு'
/
கடலுாரில் பூஜை பொருட்கள் விலை 'கிடுகிடு'
ADDED : ஆக 28, 2025 02:19 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜை பொருட்களின் விலை திடீரென உயர்ந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழக்கத்தை விட பூஜை பொருட்கள் நேற்று உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.
திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டுமல்லி நேற்று ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும், 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி 400 ரூபாய்க்கும் விற்பனையானது.
10 ரூபாய் அவுல்கடலை 15 ரூபாய்க்கும், ஒரு தேங்காய் 50 ரூபாய்க்கும், தானியகதிர், சோளம், ஆப்பிள், மாதுளை, நாவற்பழம், விலாம்பழம் உட்பட 9 வகை பழங்கள் அடங்கிய தட்டு 150 ரூபாய்க்கு விற்பனையானது. விநாயகருக்கு வைக்கப்படும் குடை 15 ரூபாயிலிருந்து 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.