/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3 ஆயிரம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
3 ஆயிரம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : டிச 09, 2025 07:03 AM

சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் 3 ஆயிரம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கணேசன் வழங்கினார்.
சிறுபாக்கம் ஊராட்சியில் மக்கள் குறை கேட்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, மக்களின் குறைகளை கேட்டறிந்து, 3 ஆயிரம் பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், தி.மு.க., ஒன்றிய செயலர் சின்னசாமி, மங்களூர் பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, சிவக்குமார், தி.மு.க., நிர்வாகிகள் ராமதாஸ், வெங்கடேசன், நிர்மல்குமார், மருதமுத்து, வேலாயுதம், செல்வராசு, மனோகரன், ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசியதாவது;
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும், கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகள், வளர்ச்சி திட்டப்பணிகள், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தி.மு.க., ஆட்சியில் சிறுபாக்கத்திலிருந்து தஞ்சாவூர் வரை செல்லும் அரசு பஸ் கொண்டு வரப் பட்டது.
மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட நபர்களுக்கு, வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார் என பேசினார்.

