/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு கணக்கில் வராத ரூ.2.22 லட்சம் பறிமுதல்
/
சார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு கணக்கில் வராத ரூ.2.22 லட்சம் பறிமுதல்
சார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு கணக்கில் வராத ரூ.2.22 லட்சம் பறிமுதல்
சார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு கணக்கில் வராத ரூ.2.22 லட்சம் பறிமுதல்
ADDED : டிச 02, 2025 07:37 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில், கணக்கில் வராத 2.22 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில், சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு, பத்திரவு பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு, புரோக்கர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றன.
அதையடுத்து, லஞ்ச ஒழிப்புப்பிரிவு டி.எஸ்.பி., (பொறுப்பு) அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், அன்பழகன் உள்ளிட்ட போலீசார், நேற்று இரவு 7:30 மணியளவில், சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் சோதனை நடத்தினர்.
அலுவலக நுழைவு வாயிலை பூட்டி, அங்கிருந்த பத்திரப்பதிவு எழுத்தர்கள், புரோக்கர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் என 25க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தனர். அவர்களிடம் இருந்த சாவிகளை கைப்பற்றி, அந்த வாகனங்களில் ஏதேனும் பணம் இருக்கிறதா என சோதனை செய்தனர்.
அப்போது, பதிவறையில் 1 லட்சத்து 47 ஆயிரம் ரொக்கம் இருந்தது. துணை சார் பதிவாளர் ஆனந்த்பாபு உட்பட ஐந்து அலுவலர்கள், ஆவண எழுத்தர்கள், புரோக்கர்கள் உட்பட 10 பேரிடம் இருந்து மொத்தமாக 2 லட்சத்து 22 ஆயிரத்து 900 ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக, இரவு 11:00 மணிக்கு மேலாக சோதனை தொடர்ந்தால் விருத்தாசலத்தில் பரபரப்பு நிலவியது. நேற்று பிற்பகல் 2:00 மணியளவில், பத்திரப்பதிவுக்கு 5 லட்சம் லஞ்சம் கேட்பதாக கூறி சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பிறகே லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கியதாக கூறப்படுகிறது.

