ADDED : மார் 18, 2024 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் அரசியல் கட்சி கொடிகம்பங்கள் அகற்றப்பட்டது.
லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி, பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிகம்பங்களை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, சஞ்சிவிராயர் கோவில் தெரு, பெரிய மதகு, அகரம் பகுதிகளில் இருந்த அரசியல் கட்சி கொடிகம்பங்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர். அகற்றப்பட்ட கொடி கம்பங்கள் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சில கட்சியினர் தங்களாகவே முன் வந்து கொடிகம்பங்களை அகற்றி எடுத்துச்சென்றனர்.

