/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாய்க்கால் கரை உடைப்பை சீரமைக்க கோரிக்கை
/
வாய்க்கால் கரை உடைப்பை சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 08, 2025 05:55 AM

புதுச்சத்திரம்: வாய்க்கால் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள னர்.
புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை வடிகால் வாய்க்கால் மூலம், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாசனம் பெற்று, 200 ஏக்கர் அளவிற்கு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 'டிட்வா' புயல் காரணமாக, கடந்த சில தினங்களாக, பெய்த தொடர் மழை காரணமாக, வடிகால் வாய்க்காலில் கரையில், 6 அடி அகலத்திற்கு உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள வயல்களில், நீர் புகுந்து நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இதனால் அப்பகுதியில் உள்ள நெற்பயிர்கள் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், உடைப்பு ஏற்பட்டுள்ள வடிகால் வாய்க்கால் கரையை சீரமைக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

