ADDED : டிச 09, 2025 07:03 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே இருமுடி சக்தி மாலை அணிவிக்கும் விழாவை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
கடலுார் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், இயற்கை சீற்றங்கள் தணி யவும், உலக அமைதி வேண்டி பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை கிராமத்தில், ஆதிபராசக்தி பக்தர்களுக்கு இருமுடி சக்தி மாலை அணிவிக்கும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் கணபதி தலைமை தாங்கி, கலச விளக்கு வேள்வி பூஜையை துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
மண்டல துணை தலைவர்கள் கோவிந்தராஜ், சீத்தாலட்சுமி, ஜோதி ஜானகி, முத்துகுமரன், குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவ்வாடை பக்தர்களுக்கு, இருமுடி சக்தி மாலை அணிவித்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் வழங்கினார்.
கோ பூஜையை, தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட பொருளார் கதிரவன் துவக்கி வைத்தார். விழாவில், நெய்வேலி சக்திபீட தலைவர் சங்க ரன், கிராம தலைவர் குமார், துணை தலைவர் தண்டபாணி, பொருளாளர் பெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், பேராசிரியர் பாலகுமார், முன்னாள் கூடுதல் செயலர் பார்த்தசாரதி, சாந்தி ராமலிங்கம் மற்றும் கிராம பொதுமக்கள், செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.
மண்டல தணிக்கை இணை செயலாளர் ஜவகர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை, கடலுார் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

