ADDED : டிச 02, 2025 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: ஞானபார்வதி உடனுறை சிவலோகநாதர் கோவிலில் சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் பழமையான ஞானபார்வதி உடனுறை சிவலோகநாதர் கோவிலில், சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் ராகுகாலத்தில் 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி யாகம் செய்து சரபேஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடந்தது. சரபேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை வாகீசன் குருக்கள் செய்தார்.

