/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை: கலெக்டர் துவக்கி வைப்பு
/
கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை: கலெக்டர் துவக்கி வைப்பு
கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை: கலெக்டர் துவக்கி வைப்பு
கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை: கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : டிச 09, 2025 07:07 AM

கடலுார்: தேசிய கைவினைப் பொருட்கள் வார விழாவினை முன்னிட்டு கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று துவக்கி வைத்து கூறியதாவது;
கைவினையர்களின் நலனுக்காக கைத்தறி, கைத்திறன், துணி நுால் மற்றும் கதர் துறை அரசு செயலாளர் தேசிய கைவினைப்பொருட்கள் வாரமாக டிச., 8 முதல் 14 வரை கொண்டாட அறிவுறுத்தியுள்ளார். அதையொட்டி கைவினை பொருட்கள், கைத்திறன் அறைகலங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கி உள்ளது. இக்கண்காட்சியில் பஞ்சலோக சிலைகள், மரச்சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சை கலைத்தட்டுகள், தஞ்சாவூர் ஓவிங்கள், களிமண், கல் மற்றும் காகிதக்கூழ் பொம்மைகள், மர வேலைப்பாட்டிலான பரிசுப் பொருட்கள், அகர்பத்திகள் உள்ளன. இங்கு, விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்கு 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 0 4142- 223099 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் புதுச்சேரி சந்துரு, பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் கார்த்திக், கைவினைக் கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

