/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அரசு கல்லுாரியில் இளைஞர் திருவிழா
/
கடலுார் அரசு கல்லுாரியில் இளைஞர் திருவிழா
ADDED : டிச 09, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரியில் 29வது தேசிய இளைஞர் திருவிழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அபிராமி சுந்தரி தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் அற்புதவேல் ராஜா பேசினார்.
பேராசிரியர்கள் சாந்தி ராமகிருஷ்ணன், நிர்மல்குமார் வாழ்த்திப் பேசினர். விழாவில், கிராமிய பாடல், நடனம், ஓவியம், கவிதை, கட்டுரை போட்டி, விளையாட்டு போட்டி நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கவுரவு விரிவுரையாளர் புஷ்பவள்ளி நன்றி கூறினார்.

