/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விபத்து குறித்த தவறான தகவல்: தீயணைப்பு நிலைய அலுவலர் வேதனை
/
விபத்து குறித்த தவறான தகவல்: தீயணைப்பு நிலைய அலுவலர் வேதனை
விபத்து குறித்த தவறான தகவல்: தீயணைப்பு நிலைய அலுவலர் வேதனை
விபத்து குறித்த தவறான தகவல்: தீயணைப்பு நிலைய அலுவலர் வேதனை
ADDED : ஜூலை 26, 2011 12:05 AM
தர்மபுரி: ''தர்மபுரி மாவட்டத்தில் தீ விபத்துக்குறித்து வரும் தகவல்களில் 100க்கு ஒன்று மட்டுமே உண்மையாக உள்ளது,'' என தீ தடுப்பு குறித்த செயல் விளக்கத்தின் போது, தீயணைப்பு அலுவலர் வேதனையுடன் தெரிவித்தார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பருவமழையை முன்னிட்டு வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்கள் மற்றும் தீ விபத்துக்களை தடுப்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் செயல் விளக்கம் நடந்தது.
டி.ஆர்.ஓ., கணேஷ் தலைமை வகித்தார். கோட்ட அலுவலர் பிரதீப்குமார், உதவி கோட்ட அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட தீயணைப்பு கமாண்டோ வீரர்கள் தீ தடுப்பு குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். வீடுகளில் ஏற்படும் சிறிய தீ விபத்துக்களை உடனடியாக தடுப்பது குறித்தும், வெள்ளம் மற்றும் விபத்துக்களில் சிக்குவோரை தீயணைப்பு துறையினர் எவ்வாறு மீட்பார்கள் என்பது குறித்தும், தீயணைப்பு துறையில் உள்ள நவீன வசதிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. தீயணைப்பு செயல்முறையை விளக்கிய ராஜேந்திரன் பேசுகையில்,''தீயணைப்பு துறைக்கு வரும் 100 ஃபோன்களில் 99 தகவல்கள் தவறான தகவல்களே வருகிறது. ஒரு தகவல் மட்டுமே உண்மையானதாக உள்ளது. தீயணைப்பு துறையில் பல்வேறு நவீன வசதிகள் வந்துள்ள நிலையில், தீயணைப்பு துறையை முறையாக மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். விபத்து, தீ விபத்து, இயற்கை சீற்றங்கள் குறித்த தகவல்களை தீயணைப்பு துறைக்கு 101 எண்ணை டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம். தீயணைப்பு வாகனங்கள் சாலைகளில் வரும் போது, ஷேர் ஆட்டோக்கள் உடனடியாக தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடுவதில்லை. இதனால், விபத்து நடக்கும் இடங்களுக்கு விரைந்து செல்ல முடியாத நிலையுள்ளது. ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தீயணைப்பு வாகனங்களுக்கு முறையாக வழி விட வேண்டும்,'' என்றார்.

