/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அதிகாரப்பட்டி ஊராட்சியில்சாலை வசதிக்கு பா.ஜ., மனு
/
அதிகாரப்பட்டி ஊராட்சியில்சாலை வசதிக்கு பா.ஜ., மனு
ADDED : மே 01, 2025 01:10 AM
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் அதிகாரப்பட்டி ஊராட்சியில், கோட்டமேடு, மாரியம்பட்டி, செங்காட்டுபுதுார், அதிகாரப்பட்டி உள்ளிட்ட, 4 கிராமங்கள் உள்ளன.
இதில் 3,000க்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான சாலை வசதி போதுமானதாக இல்லை. இதில், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து வாணியாறு கால்வாய் வழியாக செல்லும் சாலை, நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதேபோன்று, மாரியம்பட்டி கிராமத்தில் இருந்து செங்காட்டு புதுார் செல்லும் சாலை குண்டு குழியுமாக உள்ளது.
இச்சாலையை தினமும், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விவசாய பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே, இச்சாலையை தார்ச்சாலையாக செய்து தர வேண்டுமென பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் செங்காட்டுப்புதுார் சாலை உள்ளிட்ட சாலைகளை உடனடியாக தார்ச்சாலையாக மாற்றித்தர, தர்மபுரி, பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணன், பாப்பிரெட்டிப்பட்டி மண்டல, பா.ஜ., முன்னாள் தலைவர் பிரவீன் உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் சதீஷிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

