sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வேட்டையாடப்படும் வன விலங்குகள் வழக்கு பதிய தாமதம் செய்வதாக புகார்

/

வேட்டையாடப்படும் வன விலங்குகள் வழக்கு பதிய தாமதம் செய்வதாக புகார்

வேட்டையாடப்படும் வன விலங்குகள் வழக்கு பதிய தாமதம் செய்வதாக புகார்

வேட்டையாடப்படும் வன விலங்குகள் வழக்கு பதிய தாமதம் செய்வதாக புகார்


ADDED : டிச 07, 2025 08:52 AM

Google News

ADDED : டிச 07, 2025 08:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் உட்கோட்டத்தில், வன விலங்குகள் வேட்-டையாடும் சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்-வதில், தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்-துள்ளது. தமிழகத்தில் அதிக வனப்பரப்பை கொண்ட மாவட்டங்களில், தர்மபுரி, 2வது இடத்தில் உள்-ளது. தர்மபுரி மாவட்டத்தில், மொத்த நிலப்ப-ரப்பில், 40 சதவீதம் வனப்பரப்பை கொண்டது. அரூர் உட்கோட்டத்தில், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, அரூர் என, 4 வனச்சரகங்கள் உள்-ளன. இவற்றில் மான், முயல், காட்டுப்பன்றி, மயில், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.

குறிப்பாக, அரூர் வனப்பகுதியில் மான், மயில் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட கூடிய பெரிய விலங்கினங்கள் இல்லை என்பதால், கடந்த சில ஆண்டுகளாக அவற்றின் எண்-ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வனத்துறையினர் உரிய நடவ-டிக்கை எடுக்காததால், வன விலங்குகளை வேட்-டையாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள-துடன், அச்சம்பவங்களில் வழக்குப்பதிவதில் தாமதம் செய்வதாக, விலங்கின ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:


கீழ்மொரப்பூர், வாதாப்பட்டி, வாச்சாத்தி, கொள-கம்பட்டி, எட்டிப்பட்டி, கீழானுார், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சித்தேரி உள்ளிட்ட வனப்பகு-தியில் மான், முயல் மற்றும்

காட்டுப்பன்றிகளை, கள்ளத்துப்பாக்கி, கம்பி வலை மற்றும் நாய்கள் மூலம் வேட்டையாடி, அதன் இறைச்சி விற்-பனை ஜோராக நடக்கிறது. விலங்குகளை வேட்-டையாடுவோர் மீது,

வனத்துறையினர் சட்ட ரீதி-யான நடவடிக்கை எடுக்க தவறுவதால், வன குற்-றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பிடிபடு-வர்கள் மீது, உடனடியாக வழக்குப்பதியாமல்,

2 நாட்கள் வரை காலம் தாழ்த்துகின்றனர். பின், அபராதம் மட்டும் வசூலித்து விட்டு அனுப்பி விடுகின்றனர். இதில், மான் வேட்டையில் ஈடுப-டுபவர்களுக்கு கடுமையான தண்டனை

விதிக்-கப்படாமல், அபராத தொகை மட்டுமே விதிக்கப்-படுவதால், அவர்கள் மீண்டும் மான் வேட்-டையில் ஈடுபடுகின்றனர்.

அதே போல், தீர்த்தமலை மற்றும் அரூர் பழைய-பேட்டை வன சோதனைச்சாவடிகளில், அந்த வழியாக வரும் வாகன ஓட்டுனர்களிடம் பணம் வசூல் செய்யப்படுகிறது.

வனத்துறை உயரதிகா-ரிகள் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இது குறித்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறியதாவது:

வனத்துறையில் அனைத்து பணியிடங்களிலும் புதிதாக பலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம், வனக்குற்றங்களில் ஈடுபடுப-வர்களை, அதிகளவில் பிடித்து

வருகிறோம். ஒரு வழக்கில் இருவரை கைது செய்த பின், அவர்க-ளிடம் இருந்த மொபைல்போன் மூலம், மான் இறைச்சியை யார், யாருக்கு விற்பனை செய்-தார்கள் என, அடுத்தடுத்து, அதில்

தொடர்புடை-யவர்களை கண்டுபிடிக்க ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட ஆகி விடும். ஒரே நாளில் கிடைத்தார்கள் என்றால், அன்றே வழக்குப்பதி-யப்படும். வனச்சோதனை

சாவடிகளில் பணம் வசூல் குறித்து, எவ்வித புகாரும் வரக்கூடாது என, ஏற்கனவே வனச்சரக அலுவலர்களிடம் ஏற்-கனவே கூறியுள்ளோம். பணம் வசூலில் ஈடுபடு-வர்கள் மீது

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்-படும். வனவிலங்குகளை வேட்டையாடி, அதன் இறைச்சியை வியாபார நோக்கில் விற்பனை செய்வோர் மீது, வழக்குப்பதிந்து, அவர்களுக்கு அதிகளவில் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us