தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தீவன பற்றாக்குறையால் சந்தையில் அடிமாடாக விற்கப்படும் கால்நடைகள்

தீவன பற்றாக்குறையால் சந்தையில் அடிமாடாக விற்கப்படும் கால்நடைகள்

தீவன பற்றாக்குறையால் சந்தையில் அடிமாடாக விற்கப்படும் கால்நடைகள்


ADDED : ஆக 27, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 04:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூரில் புதன்கிழமையில் மாட்டுச்சந்தை நடக்கிறது. உள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கேரளாவில் இருந்து வியாபாரிகள் வாரந்-தோறும் வந்து, மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். இங்கு கன்-றுக்குட்டிகள் முதல், நாட்டு மாடு, எருமை மாடு, கலப்பின மற்றும் ஜெர்சி மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்-றன. கலப்பின மாடு ஒன்று, 45,000 முதல், 68,000 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. அதேபோல், வளர்ப்பு மாட்டுக்-கன்று ஒன்று, 6,000 முதல், 35,000 ரூபாய் வரை விலை போகின்றன.

இதில், கிடா கன்றுகள், முதிர்ந்த மாடுகள், எருமை மாடுகள் ஆகியவற்றை சேலம், நாமக்கல் மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இவை அடிமாடாக இறைச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சந்தைக்கு, விவசாயிகள் கறவை மாடுகளோ, விவசாய பணிக்கான காளை மாடுகளையோ வாங்க வருவதில்லை.

ஆனால், வறட்சியால் மாடுகளை விற்பனை செய்ய, விவசாயிகள் அதிகளவில் சந்தைக்கு வருகின்றனர். அதற்குரிய விலை கிடைக்-கவில்லை என்பதால் ஏமாற்றமடைந்து, மாடுகளை கிடைத்த விலைக்கு அடிமாடாக விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்-ளது. நேற்று சந்தைக்கு அடிமாடுகள் விற்பனைக்கு அதிகம் வந்-திருந்தன. அவற்றில் பெரும்பாலானவை அடிமாடாக விற்பனை செய்யப்பட்டன.

இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: நேற்று நடந்த சந்-தைக்கு, 250க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டன. தண்ணீர் மற்றும் தீவன பற்றாக்குறையால், மாடுகளை வளர்ப்-பதில் சிரமம் இருக்கிறது. மேலும், தீவனம் குறைவு காரணமாக, குறைவாகவே பால் கறக்கிறது. எனவே, வளர்த்த மாடுகளை விற்-பனை செய்ய வந்தோம். நேற்று நடந்த சந்தைக்கு கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வரவில்லை. அதனால், நல்ல விலை கிடைக்கவில்லை. பிள்ளைகள் போல் வளர்த்த மாடு களையும், கன்றுகளையும் அடிமாட்டுக்கு விற்பனை செய்கிறோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us