/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்கம்பத்தையும் சேர்த்து கழிப்பிடம் கட்டி வருவதாக பொதுமக்கள் புகார்
/
மின்கம்பத்தையும் சேர்த்து கழிப்பிடம் கட்டி வருவதாக பொதுமக்கள் புகார்
மின்கம்பத்தையும் சேர்த்து கழிப்பிடம் கட்டி வருவதாக பொதுமக்கள் புகார்
மின்கம்பத்தையும் சேர்த்து கழிப்பிடம் கட்டி வருவதாக பொதுமக்கள் புகார்
ADDED : டிச 07, 2025 09:23 AM

அரூர்: அரூர் வழியாக, சேலம், கோவை, வேலுார், சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெங்க ளூரு உள்ளிட்ட இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும், 27க்கும் அதிகமான டவுன் பஸ்கள், அரூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதனால், தினமும், ஆயிரக்கணக்கான பயணிகள் அரூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர்.
அரூரில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், சீரமைக்-கப்பட்ட பஸ் ஸ்டாண்டை, கடந்தாண்டு, அக்., 24ல், அமைச்சர் நேரு திறந்து வைத்தார். பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பொது இடங்களில் அமைக்க
வேண்டிய இலவச சிறுநீர் கழிப்பிடம், அரூர் பஸ் ஸ்டாண்டில் ஏற்படுத்தவில்லை. இதனால் ஆண் பயணிகள் அவசரத்திற்கு ஒதுங்க வழியின்றி, திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில், அரூர் பஸ் ஸ்டாண்டில் இலவச சிறுநீர் கழிப்பிடம் கட்டும் பணி நடக்கிறது. அது தரமற்ற
முறையில் கட்டப்படுவதாக கூறி, நேற்று முன்தினம் ஒப்பந்ததாரரிடம் பொது-மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கு வந்த அரூர் போலீசார், அவர்-களை சமாதானம் செய்து அனுப்பினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'அரூர் பஸ் ஸ்டாண்டில், பேவர்பிளாக் வழிப்பா-தையில் அஸ்திவாரம் போடாமல், மின்கம்பத்-தையும் சேர்த்து அவசரகதியில் செங்கற்களை
வைத்து, தரமற்ற முறையில் இலவச சிறுநீர் கழிப்பிடம் கட்டப்படுகிறது. இது குறித்து ஒப்பந்த-தாரரிடம் கேட்டால் முறையாக பதிலளிக்க-வில்லை. சிறுநீர் கழிப்பிடம்
தரமானதாக அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

