/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மகள் பாலியல் பலாத்காரம்: தந்தைக்கு ஆயுள் தண்டனை
/
மகள் பாலியல் பலாத்காரம்: தந்தைக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஏப் 27, 2024 06:54 AM
தர்மபுரி : பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த தம்பதியருக்கு திருமணமாகி, 17 ஆண்டுகள் ஆகிறது. திருமணம் செய்த ஆறு மாதத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்கள் பிரியும் போது, மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருந்துள்ளார். குழந்தை பிறந்த பின்னர், மனைவிக்கு வேறு ஒரு நபருடன் இரண்டாம் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து குழந்தை அவரது தந்தை வீட்டில் வளர்ந்தது.
இந்நிலையில் கடந்த, 2018 டிசம்பரில், பிளஸ் 1 படித்து வந்த அவரது மகளை, தந்தையே பாலியல் பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போக்சோ வழக்கு பதிவு செய்த பொம்மிடி போலீசார், தந்தையை கைது செய்து சிறையில் அடை த்தனர். இது தொடர்பான, வழக்கு தர்மபுரி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் செய்தது உறுதியானதையடுத்து, தந்தைக்கு ஆயுள் தண்டனை, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்.

