நில விற்பனையில் மோசடி ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது
நில விற்பனையில் மோசடி ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது
ADDED : ஜூன் 10, 2026 02:33 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம்:கிருஷ்ணகிரி
மாவட்டம், பாரதியார் நகரை சேர்ந்த சந்திரசேகர், 60. இவர் போட்டோ
ஸ்டுடியோ வைத்து தொழில் செய்து வருகிறார்.
கடந்த, 2022ம் ஆண்டு தர்மபுரி
மாவட்டம், மதிகோன்பாளையத்தை சேர்ந்த முகேஷ், 29, என்பவர்
பந்தாரஹள்ளி பகுதியில், 6.29 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி தருவதாக
கூறி சந்திரசேகரிடம், 45.70 லட்சம் ரூபாய் முன்பணமாக
பெற்றுள்ளார்.
இந்த நிலையில், 4 ஆண்டுகள் கடந்தும் நிலம் மற்றும்
பணத்தை திருப்பி தராமல் முகேஷ் தாமதம் செய்து வந்தார். இது குறித்து,
சந்திரசேகர் காரிமங்கலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கு பதிந்த காரிமங்கலம் போலீசார் முகேஷை கைது செய்தனர்.
