/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொங்கல் கருணை தொகையாக ரூ.1,000 ஓய்வூதியர்களுக்கு வழங்க கோரிக்கை
/
பொங்கல் கருணை தொகையாக ரூ.1,000 ஓய்வூதியர்களுக்கு வழங்க கோரிக்கை
பொங்கல் கருணை தொகையாக ரூ.1,000 ஓய்வூதியர்களுக்கு வழங்க கோரிக்கை
பொங்கல் கருணை தொகையாக ரூ.1,000 ஓய்வூதியர்களுக்கு வழங்க கோரிக்கை
ADDED : டிச 07, 2025 08:46 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவ-லர்கள் சங்க மாவட்ட கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் ஆறுமுகம், ஜெயபால், தணிக்கையாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்-தனர். மாவட்ட செயலாளர் கந்தசாமி வர-வேற்றார். மாநில மத்திய செயற்குழு உறுப்பினர் மணி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
இதில், வரும் டிச., 14ம் தேதி முதல் தர்மபுரியில் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வரவுள்-ளது. பொதுமக்கள் அனைவரும், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் சென்று வர ஏதுவாக,
தர்-மபுரியில் இருந்து சேலத்திற்கு மற்றும் சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு வரும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும், ஏற்க-னவே நடைமுறையில் உள்ளவாறு, கலெக்டர்
அலுவலகம் வழியாக செல்ல உரிய ஆணையை, மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும். ஓய்வூ-தியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்-படும், 1,000 ரூபாய் பொங்கல் பரிசு
தொகையை, 'ஏ' மற்றும் 'பி' கிரேடு என பிரிவு பாராமல், அனைவருக்கும் வழங்க வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி, 1,000 ரூபாய் வழங்குவதை போல, தமிழக அரசு வழங்க வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்-வூதியர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, ஏற்கனவே இருந்தபடி, பழைய ஓய்-வூதிய திட்டத்தை
அமல்படுத்த வேண்டும், என்-பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.

