ADDED : ஜூலை 05, 2026 03:00 AM
அ நிறம் | அளவு
பென்னாகரம்:
பென்னாகரம் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் மற்றும் போலீசார் பென்னாகரத்தை சுற்றி உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்-டனர். அப்போது, பென்னாகரம் நாகமரை ரோடு பழைய பத்திரப்-பதிவு ஆபீஸ் அருகே மளிகை கடையிலிருந்து, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து, மேல் நடவடிக்-கைக்காக போலீசார் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்-துரை செய்தனர். அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார், மளிகை கடை, 14 நாட்கள் இயங்க தடை விதித்தார். மேலும் உடனடி அபராதமாக, 25,000 ரூபாய் விதித்தார்.
பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த-கோபால் மற்றும் எஸ்.ஐ., சக்திவேல், கடைக்கு, சீல் வைத்தனர்.
