/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் சென்ற கார் நின்றதால் அடுத்தடுத்து வந்த கார்கள் மோதல்
/
ரோட்டில் சென்ற கார் நின்றதால் அடுத்தடுத்து வந்த கார்கள் மோதல்
ரோட்டில் சென்ற கார் நின்றதால் அடுத்தடுத்து வந்த கார்கள் மோதல்
ரோட்டில் சென்ற கார் நின்றதால் அடுத்தடுத்து வந்த கார்கள் மோதல்
ADDED : ஏப் 27, 2024 05:39 AM
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அருகே ரோட்டில் சென்ற கார் நின்றதால் அடுத்தடுத்து வந்த கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.
சேலம் மாவட்டம் சங்ககிரி இ.மேட்டுக் கடையை சேர்ந்தவர் டிரைவர் சண்முகம் 37.
தனது உறவினரின் காரில் சேலத்தில் இருந்து தனது மனைவி சங்கீதா, 3 குழந்தைகளுடன் திருச்செந்துார் சென்று விட்டு சேலம் நோக்கி சென்றார்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் காமாட்சிபுரம் அருகே சென்ற போது, காருக்கு முன்னால் டூவீலரில் சென்ற நபர் தடுமாறி கீழே விழுந்தார்.
அவர் மீது மோதாமல் இருக்க காரில் இன்டிகேட்டர் போட்டப்படி காரை நிறுத்தி உள்ளார்.
அப்போது காருக்கு பின்னால் வந்த கரூர் வெங்கமேடு ராஜேஷ் ஓட்டி வந்த காரை நிறுத்தி உள்ளார்.
ராஜேஷின் காரை பின் தொடர்ந்து வந்த சேலம் மாவட்டம் பெரமலூர் இளவரசன் ஒட்டி வந்த கார் ராஜேஷ் காரின் மீது மோதியது. இதில் ராஜேஷின் கார் சண்முகம் காரின் பின்பக்கம் மோதியது.
யாருக்கும் காயம் இல்லாத நிலையில மெயின் ரோட்டில் சிக்னல் போட்டு காரை நிறுத்திய, டிரைவர் சண்முகம், மூன்றாவதாக வந்து மோதிய கார் டிரைவர் இளவரசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாடிக்கொம்பு போலீசில் புகார் அளித்தார். தாடிக்கொம்பு எஸ்.எஸ்.ஐ., அழகர்சாமி விசாரிக்கிறார்.

