/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கள்ளிமந்தையம் நகை கொள்ளையில் கைது 1
/
கள்ளிமந்தையம் நகை கொள்ளையில் கைது 1
ADDED : டிச 09, 2025 07:51 AM

கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே தும்மிச்சிபாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதியரை தாக்கி 18 பவுன் நகை, ரூ.38 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தும்மிச்சிபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி, ராஜலட்சுமி தம்பதியை நவ.24ல் வீட்டில் கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி 18 பவுன் நகை மற்றும் ரூ. 38 ஆயிரம் பணத்தை முகமூடி நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
கள்ளிமந்தயம் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுப்படி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
கேரளாவில் பதுங்கி இருந்த கேரளா காக்கிநாடூ பகுதியை சேர்ந்த இம்ரான்கானை 45, கைது செய்தனர். இவருடன் ஈடுபட்ட தென்காசி கடையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், விஷ்ணு ஆகியோரை தேடி வருகின்றனர்.

