/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதுப்பித்து 10 ஆண்டாச்சு... பல் இளிக்கும் வத்தலக்குண்டு ரோடு
/
புதுப்பித்து 10 ஆண்டாச்சு... பல் இளிக்கும் வத்தலக்குண்டு ரோடு
புதுப்பித்து 10 ஆண்டாச்சு... பல் இளிக்கும் வத்தலக்குண்டு ரோடு
புதுப்பித்து 10 ஆண்டாச்சு... பல் இளிக்கும் வத்தலக்குண்டு ரோடு
ADDED : டிச 07, 2025 05:29 AM

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் இருந்து பள்ளபட்டி வரையிலான ரோட்டை புதுப்பித்து 10 ஆண்டாகுவதால் பள்ளம் மோடகி பல் இளிப்பதால் அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வத்தலக்குண்டில் இருந்து பள்ளபட்டி வரை 20 கி.மீ., ரோடு ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட பகுதியினர் கொடைக்கானல் செல்வதற்கு முக்கிய ரோடாக உள்ளது. இந்த ரோடை புதுப்பித்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
வத் தலக்குண்டு, கொடைரோடு நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது பெய்யும் மழைக்கு பஞ்சர் பார்த்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பாக வத்தலக்குண்டு, அம்மையநாயக்கனுார் ரோடு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டு ஆரம்பகட்ட பணி மட்டுமே நடந்தது. அதன் பின் மற்ற பணிகள் தொடரவில்லை.
சமீப நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் மேலும் சேதமாகி உள்ளது. தற்போது இந்த ரோட்டில் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.