/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிவன் கோயில்களில் 1008 சங்காபிஷேகம்
/
சிவன் கோயில்களில் 1008 சங்காபிஷேகம்
ADDED : டிச 09, 2025 07:48 AM

நத்தம்: சோமவாரத்தை முன்னிட்டு நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் 1008 சங்குகள் அமைக்கப்பட்டு வில்வ இலைகள், புஷ்பங்களால் அலங்கரிங்கப்பட் டிருந்தது.
சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. கைலாசநாதர்- செண்பகவள்ளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இது போல் காம்பார்பட்டி 1008 சிவன் கோயில், கே.அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், கணவாய்ப்பட்டி சிவன் கோயில்,குட்டூர்- உண்ணாமுலை அம்பாள்கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
வடமதுரை : மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட தீர்த்தங்கள், பன்னீர், சந்தனம், பால் உள்பட 11 வித அபிஷேக பொருட்களை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் நடந்தது.108 சங்குகள், மலர்கள், எலுமிச்சை பழங்கள் வைத்து சிவன் உருவ அமைப்பில் அலங்கரிப்பட்டு யாக பூஜைகள் நடந்தன.
சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் சங்காபிஷேக பூஜைகளை செய்தனர்.

