ADDED : மார் 20, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
நேற்றிரவு ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதி சாமிநாதபுரம் செக்போஸ்டில் மணிகண்டராஜன் தலைமையில் கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
குமாரபாளையத்தைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி நந்தகுமார் காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 500 கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. பணம் பறிமுதல் செய்யப்பட்டு உதவி தேர்தல் அலுவலர் பால்பாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

