ADDED : டிச 07, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி தெற்கு ரத வீதியில் தனியார் மண்டபத்தில் கோவை, சேலம் காயின் சொசைட்டி சார்பில் நாணய கண்காட்சி நடந்தது.
வெளிநாட்டு நாணயங்கள், சேர, சோழ, பாண்டிய நாட்டு நாணயங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட நாணயங்கள், பிரிட்டிஷ் கால நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஸ்டாம்ப், பழங்கால கலைப் பொருட்கள், வாள் ,தாமிரம், செம்பு உள்ளிட்ட பொருட்களில் செய்யப்பட்ட பொம்மைகள், சிலைகள் காட்சி படுத்தப்பட்டன. மூன்று நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு இரண்டு ரூபாய் நோட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன. சேலம் காயின் சொசைட்டி நிர்வாகிகள் சரவணன், ரியாஸ், மகேந்திரன் கவிசக்கரவர்த்தி கலந்து கொண்டனர்.

