/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இறப்பிலும் இணைந்த தம்பதி; உடல்கள் ஒன்றாக அடக்கம் குஜிலியம்பாறை அருகே சோகம்

ADDED : நவ 14, 2025 04:46 AM

குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே டாக்டர் கணவர் இறந்த துக்கம் தாங்காது அவரது உடல் மீது மயங்கி விழுந்து மனைவியும் இறந்தார். இருவரது உடல்களும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டன.
குஜிலியம்பாறை அருகே உல்லியக்கோட்டை ஊராட்சி மணியகாரன்பட்டியைச் சேர்ந்த டாக்டர் தங்கவேல் 67. இவரது மனைவி சிவஜோதி 60. இவர்களுக்கு மகள்கள் நித்யா 27, நிவேதா 25, மகன் சரவணன் 22, உள்ளனர்.
இரு மகள்கள் திருமணமான நிலையில் மகன் கோவையில் பிசியோதெரபி படித்து வருகிறார். டாக்டர் தங்கவேல் குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட் எதிரே மருத்துவமனை நடத்தி வருகிறார்.
நேற்று முன் தினம் மாலை உடல்நலம் பாதிக்கப்பட்ட டாக்டர் தங்கவேல் இறந்தார். அவரது உடல் மணியகாரன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. நேற்று அதிகாலை 3:30 மணியளவில் மகன் சரவணனை கட்டிப்பிடித்து கதறி அழுத சிவஜோதி மயங்கி கணவர் உடல் மீது சரிந்து விழுந்தார்.
அவரை கரூர் தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கணவன், மனைவிக்கு ஒரே நேரத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல்கள் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டன.