/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக் : எரியோடு யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக் : எரியோடு யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி
ADDED : நவ 14, 2025 04:48 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் எரியோடு யங்ஸ்டர்ஸ் வெற்றி அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன், பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2 வது டிவிஷன், ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3 வது டிவிஷன், மது ஸ்கேன்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி லேப் கோப்பைக்கான 4 வது டிவிஷன் போட்டிகள் ரிச்மேன், பி.எஸ்.என்.ஏ., என்.பி.ஆர்., ஆர்.வி.எஸ்., மைதானங்களில் நடந்தது.
நிலக்கோட்டை வாரியர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 160/5. (அப்துல்லத்தீப் 61, அருண்குமார் 36(நாட்அவுட்), விக்னேஷ்வரன் 3 விக்கெட்). சேசிங் செய்த திண்டுக்கல் சேலஞ்சர்ஸ் சிசி அணி 19.3 ஓவர்களில் 163/5 எடுத்து வென்றது. (முகமது ஆசிக் 77, விக்னேஷ்வரன் 35).
திண்டுக்கல் சச்சின் சிசி அணி 25 ஓவர்களில் 113/9. (யுவராஜ் 51, அபுபக்கர், விக்னேஷ்வரன் தலா 3 விக்கெட்). சேசிங் செய்த மன்சூர் சிசி அணி 21.4 ஓவர்களில் 109 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. (சதீஸ்குமார், முகமதுபிலால் தலா 3 விக்கெட்).
பாம்பம்பட்டி எய்ம்ஸ்டார் சிசி அணி 14 ஓவர்களில் 53 க்கு ஆல்அவுட் ஆனது. (பிரபு 5 விக்கெட், பிரதீப் 3 விக்கெட்). சேசிங் செய்த பழநி யுவராஜ் சிசி அணி 14.3 ஓவர்களில் 54/6 எடுத்து வென்றது.
பழநி டாமினேட்டர்ஸ் சிசி அணி 45 ஓவர்களில் 199/9. (விக்னேஷ் 77 (நாட்அவுட்), மதன்குமார் 64, சுந்தரவேல், சாம்சுபாஷ் தலா 3 விக்கெட்). சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., அணி 41.1 ஓவர்களில் 203/3 எடுத்து வென்றது. சுந்தரவேல் 94(நாட்அவுட்), சல்மான்கான் 43).
திண்டுக்கல் ஏஞ்சல்கேஸ்டர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 155/9. (சந்திரசேகர் 4, உதயகுமார் 3 விக்கெட்). சேசிங் செய்த லெவன் ஸ்டார் சிசி அணி 19 ஓவர்களில் 112 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. (ஆனந்தகுமார் 49, ஸ்டீபன் 5, ஜெகதீஷ் 3 விக்கெட்).
திண்டுக்கல் பாரத் சிசி அணி 25 ஓவர்களில் 141/9. (புனிதன் 46, பிரபுகாந்தி 4, பூபதிராஜா 3 விக்கெட்). சேசிங் செய்த எரியோடு யங்ஸ்டர்ஸ் சிசி அணி 23.1 ஓவர்களில் 144/6 எடுத்து வென்றது. பூபதிராஜா 63, நிஷாந்தன் 3 விக்கெட் பெற்றனர்.

