/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாததால் நோய்தொற்று; உள்ளாட்சிகளில் இல்லை அக்கறையின்மை
/
குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாததால் நோய்தொற்று; உள்ளாட்சிகளில் இல்லை அக்கறையின்மை
குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாததால் நோய்தொற்று; உள்ளாட்சிகளில் இல்லை அக்கறையின்மை
குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாததால் நோய்தொற்று; உள்ளாட்சிகளில் இல்லை அக்கறையின்மை
ADDED : டிச 09, 2025 06:18 AM

கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டத்தில் நோய் பரவலை தடுப்பதற்கு சுகாதாரத் துறையினர் மாதம் இருமுறை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியும் நகர் ஊரக உள்ளாட்சி நிர்வாகம் அலட்சியப் போக்கை கடைபிடிப்பதால் நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் மாநகராட்சி .நகராட்சி .ஊராட்சி .பேரூராட்சிகளில் குடிநீர் வினியோகம் மேல்நிலை குடிநீர் தொட்டிகள், சிறு மின்விசை நீர் தொட்டிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இவற்றை அந்தந்த நிர்வாகங்கள் பராமரித்து வருகின்றன. தற்போது காலநிலை மாற்றத்தால் மழை, வெயில் குளிர், காற்று என சீதோஷ்ன நிலை மாறி வருகிறது. இதனால் டெங்கு, புளு காய்ச்சல் பரவலாகி வருகிறது. நீரின் மூலம் பரவக்கூடிய நோய்களும் கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் சுகாதாரத் துறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் மேல்நிலைத் தொட்டிகளை மாதம் இருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் நகர, ஊரக உள்ளாட்சி நிர்வாகங்களால் குடிநீர் தொட்டிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் சுத்தப்படுத்தப்படுகிறது. அதிலும் ஊரக உள்ளாட்சிகளில் சுத்தப்படுவது முறையாக நடப்பது இல்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்
குளோரிஷன் கலந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பொதுமக்கள் இக்குடிநீரை நேரடியாக அருந்துவதன் மூலம் நோய் அதிகரிக்கத்தான் செய்கிறது. அவ்வாறு நோயின் தாக்கம் அதிகரிக்கும் இடங்களில் சுகாதாரத் துறையினர் முகாம்கள் நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பும் போது மட்டுமே அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதில் அக்கறை காட்டுகின்றன. அதன் பிறகு கண்டு கொள்வதில்லை. அதிகாரிகளும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதை கண்காணிக்காததால் முறையாக நடப்பது இல்லை.
...........
அவசியம் முன்னெச்சரிக்கை
கிராமங்களில் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது இல்லை. இதை அதிகாரிகள் கண்காணித்து கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். குளிர்காலம் தொடங்கி விட்டதால் நீரினால் பரவும் நோய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நோய் தொற்று ஏற்படாமலும், பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தங்கப்பாண்டி, எலக்ட்ரீசியன், மேலக்கோவில்பட்டி.
..........

