தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கண்டெய்னரில் தண்ணீர் பாட்டில்களுக்கு மத்தியில் 550 கிலோ குட்கா, புகையிலை கர்நாடகாவிலிருந்து கடத்திய டிரைவர் கைது

 கண்டெய்னரில் தண்ணீர் பாட்டில்களுக்கு மத்தியில் 550 கிலோ குட்கா, புகையிலை கர்நாடகாவிலிருந்து கடத்திய டிரைவர் கைது

 கண்டெய்னரில் தண்ணீர் பாட்டில்களுக்கு மத்தியில் 550 கிலோ குட்கா, புகையிலை கர்நாடகாவிலிருந்து கடத்திய டிரைவர் கைது


ADDED : ஜூலை 05, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் இருந்து தேனி சென்ற கண்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 550 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை மூடைகளை தாடிக்கொம்பு போலீசார் கைப்பற்றி, டிரைவர் சுப்பிரமணியை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரூவில் இருந்து தேனிக்கு லாரியில் குட்கா பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல்-- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேனி நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை போலீசார்சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, சோதனையிட்டனர்.

கண்டெய்னர் உள்ளே சுற்றிலும் தண்ணீர் பாட்டில்கள் இருந்த நிலையில் நடுவே ஏராளமான சாக்கு மூடைகள் அடுக்கப்பட்டிருந்தன. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. சாக்கு மூடைகளை பிரித்து சோதனை செய்த போது, அதில் 23 பெரிய சாக்குப்பைகளில் 49 சிறிய மூடைகளாக அரசால் தடை செய்யப்பட்ட 550 கிலோ புகையிலை, குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது.

அதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

இதையடுத்து போலீசார் குட்கா, புகையிலைப் பொருட்கள், கண்டெய்னர் லாரியைபறிமுதல் செய்துதாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.

கடத்தல் தொடர்பாக பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தலாரி டிரைவர் சுப்பிரமணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us