/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூண்டு வணிகத்துக்கு போலி முகவரியில் புவிசார் அனுமதி
/
பூண்டு வணிகத்துக்கு போலி முகவரியில் புவிசார் அனுமதி
பூண்டு வணிகத்துக்கு போலி முகவரியில் புவிசார் அனுமதி
பூண்டு வணிகத்துக்கு போலி முகவரியில் புவிசார் அனுமதி
ADDED : நவ 14, 2025 04:47 AM
திண்டுக்கல்: போலி முகவரியில் வேளாண் பொருள் விற்பனை நிறுவனத்தில் பதிவு செய்தவர்கள் பூண்டு வணிகத்துக்கு புவிசார் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
திண்டுக்கல், கொடைக்கானல், பூம்பாறை, மகர்னவவுார், கூக்கால், பூண்டி உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் உள்ள 720 விவசாயிகள் பங்கு தாரர்களாக கொண்ட கோடை மலைப்பூண்டு, காய்கறிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 2020 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பூண்டு உள்ளிட்ட மலைப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையும் மலைப்பூண்டிற்கு விவசாயிகள் புவிசார் குறியீடு பெற்று ஏற்றுமதி வணிகம் செய்கின்றனர்.
இந்நிலையில் கோடை மலைப்பூண்டு , காய்கறிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பங்குத்தாரர் பெயரிலான பங்கு ஆவணத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்தி பூண்டு வணிகத்துக்கு புவிசார் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருப்பதாக அந்நிறுவன இயக்குனர் வடிவேல் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் ,பூண்டி பகுதியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடத்தில் பராமரிப்பற்ற நிலையில் மாட்டுத்தொழுவம் உள்ளது. இந்த தொழுவத்தின் முகவரியில் போலியாக வேளாண் பொருள் விற்பனை நிறுவனத்தை பதிவு செய்துள்ளனர். பூண்டு விவசாயம் செய்யாமலே கோடை மலைப்பூண்டு , காய்கறிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பங்குதாரரின் ஆவணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்ததோடு மலைப்பூண்டு விற்பனை செய்வதற்கான அனுமதி பெற விண்ணப்பித்து உள்ளனர்.இதுபோன்ற போலி நிறுவனங்களுக்கு புவிசார் குறியீடு கொடுப்பதன் மூலம் கொடைக்கானல் மலைப்பூண்டு விற்பனை,அதை விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம், வணிகம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
முறைகேடான ஆவணங்கள், போலி முகவரி கொடுத்து பூண்டு வணிகத்துக்கு அனுமதி கேட்கும் நிறுவனங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கக்கூடாது என்றார்.

