/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டிராக்டரை திருடிய வடமாநில வாலிபருக்கு தர்ம அடி
/
டிராக்டரை திருடிய வடமாநில வாலிபருக்கு தர்ம அடி
ADDED : நவ 14, 2025 04:48 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் டிராக்டரை திருடிச்சென்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் நத்தம் சாலை அரசு ஐ.டி.ஐ. அருகே கேசவன் என்பவர் நேற்று காலை தனது டிராக்டரை நிறுத்தி சென்றார். அந்த வழியாக வந்த வடமாநில இளைஞர் டிராக்டரை திருடி சென்றார். இதை பார்த்த பொதுமக்கள் விரட்டி சென்று சிறுமலை சாலையில் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், டிராக்டர் திருடிய வாலிபர் பீகாரை மாநிலத்தை சேர்ந்த அமலேஷ் யாதவ் எனவும், 2 நாட்களாக திண்டுக்கல் சுற்றிய பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டது போல் சுற்றித் திரிந்ததும் தெரிந்தது. இதுதொடர்பாக அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

