sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பி.புதுப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் தேங்கும் மழை நீரால் பரிதவிப்பு

/

 பி.புதுப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் தேங்கும் மழை நீரால் பரிதவிப்பு

 பி.புதுப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் தேங்கும் மழை நீரால் பரிதவிப்பு

 பி.புதுப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் தேங்கும் மழை நீரால் பரிதவிப்பு


ADDED : டிச 09, 2025 07:50 AM

Google News

ADDED : டிச 09, 2025 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: பாடியூர் பி.புதுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்திற்குள் ஒவ்வொரு மழைக்கும் பெருமளவில் நீர் தேங்கி நிற்பதால் ஊராட்சி சார்ந்த மக்களும், கூட்டுறவு ஊழியர்கள் அதிக சிரமத்திற்குள்ளாகின்றனர்.

பாடியூர் ஊராட்சியில் கூட்டாத்துபட்டி, மோளப்பாடியூர், இ.புதுார், எம்.புதுார், கரையாம்பட்டி, மகாலட்சுமிபுரம், வேலாம்பட்டி, பாடியூர், பா.புதுப்பட்டி, நாட்டாண்மைகாரன்பட்டி, என்.பாரைப்பட்டி, பாம்பலநாயக்கன்பட்டி, கிரியம்பட்டி என கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்காக பி.பாடியூர் புதுப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயங்குகிறது.

கூட்டுறவு சங்கத்தின் 3 பக்கமும் தனியார் தொழிற்சாலை , முகப்பில் முள்ளிப்பாடி குளத்துார் மெயின் ரோடும் உள்ளது. சுற்றியிருக்கும் அனைத்து பகுதிகளும் மேடாக இருக்கும் நிலையில் கூட்டுறவு சங்கம் மட்டும் பள்ளமாக உள்ளது.

அருகில் இருக்கும் பல ஏக்கர் பரப்பு தொழிற்சாலை வளாகத்தில் சேகரமாகும் மழை நீர் ஒரு சேர வாசல் பகுதியில் இருக்கும் வாய்க்கால் மூலம் வெளியேற்றப்படுகிறது.

இந்த நீர் அனைத்தும் பள்ளமாக இருக்கும் கூட்டுறவு வளாகத்தில் புகுந்துவிடுகிறது. இதனால் ஒவ்வொரு மழைக்கும் கூட்டுறவு சங்க வளாகத்தில் நீர் தேங்கி நிற்கிறது.

இந்த நீர் பூமிக்குள் செல்லும் வரை சராசரியாக 3 நாட்கள் வரை மக்கள் கூட்டுறவு சங்கத்திற்குள் சென்று வருவதற்கு அதிக சிரமம் அடைகின்றனர். இங்கு ஏற்படும் இச்சிரமத்தை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மேடா க்க வே ண்டும் ஆர்.பொன் னுச்சாமி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர், பி.புதுப்பட்டி: பாடியூர் பி.புதுப்பட்டி பகுதியில் கன மழை பெய்ததால் கூட்டுறவு வளாகம் முழுவதும் நீர் நிரம்பி விடுகிறது. இதனால் குறைந்தது ஒரு நாளாவது திறக்கப்படாமல் மூடியே வைக்க வேண்டியுள்ளது.

சுற்றியிருக்கும் பகுதிகள் அனைத்தும் மேடாக இருக்கும் நிலையில் கூட்டுறவு வளாகம் மட்டும் பள்ளமாக உள்ளது. இப்பகுதிக்குள் தொழிற்சாலை பகுதியில் இருந்து வெளியேறும் நீர் புகுவதை தடுக்க வேண்டும். மேலும் கூட்டுறவு சங்க வளாகத்தினுள் மண் நிரப்பி மேடாக்க வேண்டும்.

-பல வகையிலும் பாதிப்பு பி.சக் திவேல், தே.மு.தி.க., முன்னாள் ஒன்றிய செயலாளர், நாட்டாண்மைகாரன்பட்டி: -பாடியூர் பி.புதுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்திற்குள் இப்பகுதி மக்களுக்கான ரேஷன் கடையும் செயல்படுகிறது.

ஒவ்வொரு மழைக்கும் நீர் தேங்கும் பிரச்னை ஏற்படும்போது ரேஷன் பொருட்கள் வாங்க செல்வோர், இதர கூட்டுறவு சங்க சேவைகளை பெற செல்லும் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

ரே ஷன் கடைக்கு பொருட்கள் கொண்டு வரும் லாரிகளும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பல வகைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us